“திமுக இபிஎஸ்சை முதலமைச்சராக்க முயன்றது”- ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி

 
ச்

அமைச்சரவையில் திருமாவளவன் பங்கு பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா,  “அமைச்சரவையில் திருமா இடம் பெற வேண்டும் என CM விஜய் விரும்புகிறார். அமைச்சரவையில் காங். இணைய வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர்.  அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து விசிக, ஐயூஎம்எல் ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.

திமுகவும், அதிமுகவும் விஜய்யை குறைத்து மதிப்பிட்டனர். திமுக- இபிஎஸ் இணைந்து தவெகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்க முயன்றனர். பின்புறவாசல் வழியாக இபிஎஸ் முதலமைச்சராக திட்டமிட்டார். மக்களின் தீர்ப்புக்கு எதிராக இபிஎஸ் திட்டம் தீட்டினார். திமுக தனது கொள்கையை மறந்து இபிஎஸ்சை முதலமைச்சராக்க முயன்றது. அதிமுகவுடன் இணைந்து மக்களுக்கு எதிரான அரசை அமைக்க திமுக முயன்றது. அமைச்சர் பதவிக்காக சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்களிடம் வரவில்லை. அதிமுகவை காப்பாற்றவே தவெகவிற்கு சி.வி.சண்முகம் அணி ஆதரவு அளித்தது. அதிமுகவினருடன் தோழமையோடு இருப்போம். அடுத்த செயல்திட்டம் என்ன என சி.வி.சண்முகம் முடிவு செய்வார்” என்றார்.