“தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள்..”- ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜூனா சவால்
தமிழக முதல்வர் புதுச்சேரி அரசின் சட்டம்- ஒழுங்கை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, “தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் புதுச்சேரிக்கும் சேர்த்து விஜய் மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறார். எம் ஜி ஆர் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரிக்கும் சேர்த்தே சிந்தித்தார். அவர் வழியில் புதுச்சேரிக்கும் சிறப்புத் திட்டங்களை தவெக தலைவர் வைத்துள்ளார். அடுத்த 50 வருடத்திற்கு புதுச்சேரி வரலாற்றை மாற்ற விஜய் காத்திருக்கிறார். தில் இருந்தா தேர்தல்ல மோதுங்க. வெள்ளத்தை நிப்பாட்ட முடியுமா. காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ அப்படிதான் தவெகவை நிறுத்த முடியாது. புதுச்சேரி போன்ற பாதுகாப்பு தமிழ்நாட்டில் கொடுக்கப்படவில்லை. தமிழக முதல்வர் புதுச்சேரி அரசின் சட்டம்- ஒழுங்கை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை நடத்துவோம்” என்றார்.


