“மொத்த தி.மு.க.வுக்கே பாடம் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய்”- ஆதவ் அர்ஜூனா

 
ச்

அவதூறுகளுக்கு அஞ்ச மாட்டார் முதல்வர், திமுகவிற்கு முதல்வர் விஜய் பாடம் எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

பனையூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “ஆபாசமாக பேசிய உதயநிதியை கைது செய்து திமுகவிற்கு பாடம் எடுத்துள்ளாா் முதலமைச்சா் விஜய். கடந்த 80 நாட்களில் தவெக அரசைக் கவிழ்ப்பது தான் திமுகவின் முதல் கொள்கையாக இருக்கிறது. எதிா்காலமே இல்லாமல் வீட்டில் அமா்ந்துள்ள மு.க.ஸ்டாலின் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்துகொண்டிருக்கிறார். தோல்விக்கான காரணம் என்ன என்பதையே இதுவரை திமுக அறியவில்லை.  தோல்விக்கு காரணம் பண்ணையாா் தனம்தான். கொளத்தூர் சென்ற முதல்வரால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது, அதனால் சேப்பாக்கம் மிஸ் ஆகி விட்டது. சட்டமன்றத்தில் மரபை மீறிய செயலை திமுக செய்தது. சட்டமன்றத்தில் மரபை கடைபிடிக்கும் இயக்கும் தவெக. அண்ணா உருவாக்கிய இயக்கத்தை ஆபாச மொழியால் அழிக்கிறார் உதயநிதி. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு ஏற்க முடியாதது. எம்ஜிஆர் இருக்கும் வரை திமுகவால் வெல்ல முடியவில்லை. திமுகவுக்கு எதிர்காலம் இல்லை.

முதலமைச்சர் விஜய் பெண்களை தரக்குறைவாக, அவதூறாக பேசியதில்லை. பெண்களை கடவுளாக பேசுவதை விட சமத்துவமாக பேச வேண்டும். பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். திமுகவினர் தனிப்பட்ட தாக்குதல்களை செய்கின்றனர். தவெக எம்எல்ஏக்களிடம் செந்தில் பாலாஜி பேரம். 70 வருட பாரம்பரிய கட்சியின் தலைவர் கொளத்தூரில் தோல்வி. கடந்த தேர்தலில் சேப்பாக்கம் Just Miss ஆகிவிட்டது. உங்க தாத்தாவோட அடையாளம், திமுகவின் அடையாளம் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாங்க. சேப்பாக்கத்தில் முதல்வர் விஜய் ஒரு சாமானிய பெண்ணை வேட்பாளராக நிறுத்துவார். சவால் விடுகிறோம். நீங்கள் மீண்டும் சேப்பாக்கத்தில் நின்றால் டெப்பாசிட் கூட வாங்க மாட்டீர்கள்” என்றார்.