ஆவின் பெண் ஊழியர் பலி - மேற்பார்வையாளர் கைது
திருவள்ளூர் ஆவின் பால் பண்ணை பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நேற்று (20.08 2024) இரவு பால் பாக்கெட்டுகள் உற்பத்தியின் போது பணியில் இருந்த உமா மகேஸ்வரி என்கிற பெண் ஒப்பந்த தொழிலாளரின் சுடிதார் துப்பட்டா இயந்திரத்தின் கன்வேயர் பெல்டில் மாட்டிக் கொண்டு இழுத்த போது தலைமுடியும் சேர்த்து சிக்கிக் கொண்டதால் அவரது தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே பலியானார்.
இந்நிலையில் திருவள்ளூர் ஆவின் பால் பண்ணை பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றிய மேற்பார்வையாளர் வருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். வருண்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பால் பண்ணையில் பெண் இறந்த சம்பவத்தில் இரவுப்பணி பொறுப்பாளர் அஜித்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இயந்திர பிரிவு பொறுப்பாளர் அகிலேஷ் ராஜா மீதும் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கண்கானிப்பாளர்கள் விக்னேஷ், கமல்சிங், உதவியாளர்கள் சுரேஷ், அருண்குமார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..