அப்துல்கலாம் நினைவு தினம் - அண்ணாமலை ட்வீட்

 
Annamalai

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தையொட்டி அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

APJ Abdul kalam

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசுத் தலைவரும், பாரதத்தின் பெருமைமிகு புதல்வருமான ஐயா அப்துல்கலாம் அவர்கள் நினைவுதினம் இன்று.



தாய்நாட்டுக்காகவும், இளைஞர்கள்  முன்னேற்றத்துக்காகவும் தன் இறுதி வரை அயராது உழைத்த ஐயா அப்துல் கலாம் அவர்கள் நினைவைப் போற்றுவோம். அவரது வழியில் சிறப்பான இந்தியாவை உருவாக்க அனைவரும் உழைப்பதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.என்று குறிப்பிட்டுள்ளார்.