தமிழ்நாட்டை உலுக்கிய அபிராமி வழக்கு : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

 
 தமிழ்நாட்டை உலுக்கிய அபிராமி வழக்கு : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!  தமிழ்நாட்டை உலுக்கிய அபிராமி வழக்கு : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!


கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்த இளம்பெண் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடித்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் - அபிராமி தம்பதி.  விஜய் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில்,  அபிராமி டிக்- டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாகி வந்தார். இந்த தம்பதிக்கு அஜய் என்கிற மகனும், கர்னிகா என்கிற மகளும் என இரண்டு  குழந்தைகள் இருந்தனர்.  அபிராமிக்கும் அதேப்குதியில்  பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த  மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமே நாளடைவில் தகாத உறவாக மாற, அந்த விவகாரம் கணவர் விஜய்க்கு தெரியவந்துள்ளது.

 இதனைக்கேட்டு விஜய், அபிராமியை கண்டிக்க அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய துணிந்த அபிராமி, கடந்த 2018ம் ஆண்டு  தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் நல்வாய்ப்பாக விஜய் உயிர் தப்பிய நிலையில்,  2 பிஞ்சுக் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்ற தாயே பிள்ளைகளை கொலை செய்த சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

 தமிழ்நாட்டை உலுக்கிய அபிராமி வழக்கு : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து அபிராமியை தேடிவந்த போலீஸார், கள்ளக்காதலனுடன் தப்பிச் செல்ல இருந்தபோது இருவரையும்  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அப்போது கள்ளக்காதலுக்காக பெற்ற  குழந்தைகளையே கொன்ற தாய், தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும், கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என்றும்  தீர்ப்பு வழங்கப்பட்டது.  

தொடர்ந்து தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, இளம்பென் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.