சென்னையில் இதுவரை சுமார் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

 
gyy

சென்னையில் இதுவரை சுமார் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

tn

தமிழ்நாடு முழுவதும்  தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களைகட்டியது.  இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சூழலில் சென்னையில் பட்டாசு  வெடித்ததன் காரணமாக காற்றின் தர குறியீடு 200 தாண்டியது. தஅத்துடன் சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக  காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

tn

இந்நிலையில் சென்னையில் இதுவரை சுமார் 150 டன் பட்டாசு கழிவுகள்  தூய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளதாக  சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வெடிக்கப்பட்ட பட்டாசின் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதால் தூய்மை பணியாளர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.