உயர்கல்வி பெறுவது அடிப்படை உரிமை இல்லை- சென்னை உயர்நீதிமன்றம்

 
Highcourt

உயர்கல்வி அடிப்படை உரிமை அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Madras High Court vouches for English as language for communication between  Union and states not adopting Hindi as official language

தமிழகம் முழுவதும் 15 அரசு சட்டக்கல்லூரிகளும், 9 தனியார் சட்டக் கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வரும் நிலையில், 11 தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்க அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில், தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்க தடை விதிக்கவும், சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் துவங்க உத்தரவிட வேண்டும் என  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கல்வி பெறுவது அடிப்படை உரிமை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஆறு வயது முதல் 14 வயது வரை தொடக்க கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை எனவும், உயர் கல்வி அடிப்படை உரிமை அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.