சிவகாசி அருகே பட்டாசு கடையில் விபத்து! தீபாவளி பட்டாசுகள் கருகின

 
ச் ச்

சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் தீயில் எரிந்து சேதமாகின.

சிவகாசியிலிருந்து வெம்ப கோட்டை சாலையிலுள்ள சசி நகரில் வசிப்பவர் கோபால். இவர் தனது மனைவி ஜெயலட்சுமி பெயரில் சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலை அனுப்பன்குளம் பிரதான சாலையில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை பட்டாசு விற்பனைக்காக கோபால் தனது பட்டாசு கடையை சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் வெளியூர்களில் இருந்து தங்களது தேவைக்காக பட்டாசு கடை கொள்முதல் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டு பட்டாசு வியாபாரம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது கார்த்திகேயன் நடத்திவரும் பட்டாசு கடையான ஜெயலட்சுமி டிரேடர்ஸ் பட்டாசு கடையில் அட பட்டாசுகளில் ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. 

இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடியதால் யாருக்கும் எந்த விதமான காயமோ உயிர் இழப்பு ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் இந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் நான்கு வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணி யில் நீண்ட நேரம் போராடி ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கிழக்குப் பகுதி போலீசார் பட்டாசு கடை விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் பிரதான சாலையில் பட்டாசு கடையில் வெளி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துகள் அனைத்தும் வேறு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பட்டாசு கடை விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதம் ஆனது.