தீபாவளியையொட்டி ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் : என்ன தெரியுமா?

 
ration card

நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ration

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர்களுக்கு அத்துறையின் உயர் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  "ரேஷன் கடைகளின் மூலம்  குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு கொண்டு வருவதை முழுமையாக முடிக்க வேண்டும்.  இதன் காரணமாக  நவ 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும்.  அத்துடன்  நவம்பர் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ration

மேலும் இந்த முடிவானது கடந்த 11-ந் தேதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பனை தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.