அரசம்பட்டி தென்னை உள்ளிட்ட 10 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

 
Arasampatti thennai

அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது. 

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் பருத்தி இயக்கம் தொடங்கப்படும், அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்படும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவேரி வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  1,32,000 ஏக்கர் வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்திப் பராமரிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.