எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து!

 
eps and ajith

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். அவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டதால் அவரே பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டவிரோதமாக நடைபெறுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து அவர் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.  அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார். இந்த தகவலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.