விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல்!!

 
tn

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு  நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில்  வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ajith 62இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகராக விளங்கும் நடிகர் அஜித் நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு தனது இரங்கலினை பதிவு செய்துள்ளார்.  பிரேமலதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த அவர்,  துபாயில் இருப்பதால் தான் நேரில் பங்கேற்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.