தற்கொலை வரைக்கும் சென்றும் அஜிதாவுக்கு சீட் கிடைக்கல... ஸ்ரீநாத் தூத்துக்குடியில் போட்டி

 
தற்கொலை வரைக்கும் சென்றும் அஜிதாவுக்கு சீட் கிடைக்கல... ஸ்ரீநாத் தூத்துக்குடியில் போட்டி

விஜயின் நண்பர் ஸ்ரீநாத் தூத்துக்குடி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Image


2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தவெக தலைவர் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு உறுதியாக கிடைக்கும் வெற்றி என்றால் அது தூத்துக்குடி தான் என்று பலர் நினைத்திருந்தார்கள். அதற்கு காரணம் களத்தில் இறங்கி முழுமையாக வேலை செய்தவர் அஜிதா. ஆனால் உள்ளூரில் இரு தரப்புக்குள் நடந்த கோஷ்டி மோதலால், ஆரம்பத்திலிருந்தே வேலை பார்த்த இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக பதவிக்கிடைக்காத விரக்தியில் அஜிதா தற்கொலை வரை சென்றார்.

ajitha

இருதரப்புக்கும் இடையிலான கோஷ்டி மோதல்களை தடுக்கவே, விஜய் ஒரு நடுநிலையான, நம்பிக்கைக்குரிய தனது நண்பர் ஸ்ரீநாத்தை அந்த தொகுதியில் களமிறக்கியுள்ளார். அஜிதா போன்றவர்களின் உழைப்பு மறுக்க முடியாதது. ஆனால் அரசியல் சதுரங்கத்தில் சில நேரங்களில் 'சரியான நபர்' என்பதை விட 'சரியான நகர்வு' முக்கியமாகிறது. அரசியலில் திறமையை விடத் துரோகம் செய்யாத விசுவாசத்திற்கே முதல் இடம். ஸ்ரீநாத் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, தூத்துக்குடியை ஒரு தனிநபர் கோட்டையாக மாற்றாமல், தலைமையின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுக்கப்பட்ட முடிவு என்றே விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.