நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் 12ம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த சூழலில் நேற்றிரவு தூங்க சென்ற மீராவை விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை விஜய் ஆண்டனி படுக்கை அறையில் சென்று பார்த்த போது, அவர் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து உடனடியாக வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பி @vijayantony மகளின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீராவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 19, 2023
இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தம்பி விஜய் ஆண்டனி மகளின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீராவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.