நடிகர் மன்சூர் அலிகான் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிப்பு

 
mansoor ali khan mansoor ali khan

நடிகர் மன்சூர் அலிகான் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.

“கொரோனாவா அப்டினு ஒன்னு இல்லவே இல்ல” – மன்சூர் அலிகானின் அடுத்த குண்டு!


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் முகாம்கள் அமைத்தும், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers-BLOs) வீடு வீடாக சென்றும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை (Enumeration Forms) வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நாளை காலை 8 மணி முதல்  'சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்' இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.