நடிகர் மன்சூர் அலிகான் நாளை ஆஜராக சம்மன்

 
பாஜகவையே விமர்சனம் பன்றீங்களா?…. மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!! பாஜகவையே விமர்சனம் பன்றீங்களா?…. மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் விசாரணைக்கு நடிகர் மன்சூர் அலிகான் நாளை நேரில் ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Image

லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் வழங்கினர். மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் போலீசார் சம்மன் வழங்கிவிட்டு வந்துள்ளனர். அவரை நாளை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.