நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதி!

 
mohan babu mohan babu

நடிகர் மோகன் பாபு திடீரென உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் வீடு அமைந்துள்ளது. மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. நேற்று மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் சிலருடன் அவரது வீட்டிற்குள் நுழைய முயன்ற நிலையில், அதனை படம் பிடிப்பதற்காக செய்தியாளர்கள் சிலர் அங்கு சென்றனர். இந்திய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் சிலர் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதேபோல் நடிகர் மோகன் பாபுவும் செய்தியாளர்களிடம் இருந்து மைக்கை பிடிங்கி அவர்களை தாக்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் மோகன் பாபு திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் மோகன் பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கில் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.