என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன் - கமல் ஹாசன் ட்வீட்

 
tn

மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாளையொட்டி நடிகர் கமல் ட்வீட் செய்துள்ளார்.

tn

நாகேஷ் நகைச்சுவை நடிக‌ராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். 1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.

tn

திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன் கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக இவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமல்ஹாசன் படங்களில் நாகேஷ் தொடர்ந்து நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்.



இந்நிலையில் நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன், மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.