நடிகர் பார்த்தசாரதி தேப் காலமானார்..!
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப் (68) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்தனர்.
நீண்ட காலமாக சிஓபிடி தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஒரு வார காலமாக ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(மார்ச்23) அவர் இறந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல்களில் பிரபலமான முகமாக இருந்த தேப், சமீபத்தில் வெளியான 'ரக்தபீஜ்' உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாது தியேட்டர் டிராமா, வெப் சீரிஸ் போன்றவைகளில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாது, அவர் மேற்கு வங்க திரைப்பட கலைஞர்கள் மன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
மேற்கு வங்க திரைப்பட கலைஞர்கள் மன்றம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் டெக்னீசியன் ஸ்டுடியோவுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படும் என்றும் கூறியுள்ளது. தேப் மறைவுக்கு பலரும் தங்களது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.