ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பேட்டி! நடிகர் பிரசாந்திற்கு ரூ.2,000 அபராதம்

 
பிரசாந்த்

நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆகவே அதற்கான புரமோஷனில் படு பிஸியாகி உள்ள நடிகர் பிரசாந்த் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பைக் ஓட்டிக் கொண்டே பேட்டி அளித்த காட்சிகள் சமீபத்தில் வெளியானது.    

Image

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், ட்விட்டர்வாசி ஒருவர் அந்த வீடியோவை சென்னை மாநகர காவல்துறைக்கு டேக் செய்து, “டூவீலர் விதிகள் சாமானியருக்கு மட்டுமா .. ஒரு பிரபல நடிகராக பிரசாந்த் இது போல் விதிமுறைகள் மீறும்போது நடவடிக்கைகள் இருக்காதா .. இல்லை நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாமே ..” எனக் கூறியிருநந்தார்.



ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி ஆகியோருக்கு ரூ.2,000 அபராதம் விதித்தது சென்னை போக்குவரத்து காவல்துறை. அதனை ட்விட்டரிலும் குறிப்பிட்டுள்ளது.