நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோயிலில் தரிசனம்!!
Updated: Jun 1, 2024, 10:34 IST1717218275131
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை சென்றுள்ளார். கடந்த 29-ம் தேதி அவர் தனது நண்பர்கள் ஸ்ரீஹரி உள்ளிட்டோருடன் இமயமலைக்கு சென்றார்.

இந்நிலையில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.

பத்ரிநாத் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் ஜுன் 3 அல்லது 4-ம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


