நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

 
Mohan Mohan

விவாகரத்து வழக்கில் நடிகர் ரவி மோகன் -ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தார். ஜெயம் ரவி என்ற தனது பெயரையும் ரவி மோகன் என மாற்றினார். இதுதொடர்பாக ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான் என கூறினார். 
இந்த நிலையில், விவாகரத்து வழக்கில் நடிகர் ரவி மோகன் -ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். வழக்கின் விசாரணை வரும் ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.