உடல்நிலையில் திடீர் பின்னடைவு- ஐசியூவில் ரோபோ சங்கர்

 
robo Shankar robo Shankar

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னையில் கௌதம் வாசுதேவ் மேனன், தர்ஷன், ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கும் காட்ஸ்ஜில்லா என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கியது.  முதல் நாள் படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி உள்ளார் என கூறப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதனை அடுத்து உடனடியாக துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. 


இந்நிலையில் தற்போது ரோபோ சங்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ)-வில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.