அமரன் வெற்றி- மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் நேர்த்திக்கடன்
அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் மற்றும் பதினெட்டாம்படி கருப்பன் சன்னதியில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார்.

மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இன்று பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அமரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதால் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தியதாக சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று கோவிலுக்கு வந்த கோவிலுக்கு தனது மனைவி ஆர்த்தி யுடன் சிவகார்த்திகேயன் பெருமாள் சன்னதி மற்றும் கோவிலில் உள்ள தாயார் ஆண்டாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து காவல் தெய்வமான 18 ஆம் படி கருப்பண்ணசாமிக்கு அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோவிலில் இருந்த காவலர்கள் மற்றும் பக்தர்கள் சிவகார்த்திகேயனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு கோவில் நிர்வாகம் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.


