கமல்ஹாசனுக்கு நடிகர் சிவக்குமார் வாழ்த்து

 
tn

நாளை பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு நடிகர் சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

kamal

உலகநாயகன் கமல்ஹாசன் நாளை  தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது

tn

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், "நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும் தான். அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை’ இதுவரை வேறுயாராலும் செய்ய முடியவில்லை. 8 படங்களில் நாம் சேர்ந்து நடித்தோம். வில்லன் வேடங்களில் நடித்து, ஹீரோவாக உயர்ந்த முதல் நடிகர் நீங்கள்தான். நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. | நீங்கள் திரையில் சாதித்ததை அரசியலிலும், சாதிக்க முடியும். துணிந்து இறங்குங்கள்."என்று குறிப்பிட்டுள்ளார்.