“மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்? நடிகராக இருந்துகொண்டே நல்லது செய்யலாம்”- நடிகர் சிவராஜ்குமார்

 
ச் ச்

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம். காரணம் இது என்னுடைய பணம். யாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவி செய்யலாம் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில், கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ள "45:தி மூவி" வருகிற 9 ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியாக உள்ளது. திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார்கள் சிவராஜ் குமார், உபேந்திரா மற்றும் ரமேஷ் ரெட்டி, வின்சன்ட் அசோகன், இயக்குனர் அர்ஜுன் ஜன்யா ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேடையில் பேசிய சிவராஜ் குமார், “விஜய் ஆண்டனி நடித்திருக்கக்கூடிய பிச்சைக்காரன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே கதை நடிப்பதற்கு எனக்கு கன்னடத்தில் வாய்ப்பு வந்தது இருப்பினும் என்னால் அதை பண்ண முடியாமல் போய்விட்டது. வின்சன்ட் அசோகன் என்னை மேடையில் அவர் என மரியாதையுடன் பேசினார் தயவு செய்து அப்படி பேச வேண்டாம். கடந்த காலகட்டங்களில் எப்படி பேசினாலும் அதைப்போலவே பேச அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த கதையை என்னிடம் இயக்குனர் ஐந்து நிமிடத்திற்கு கூறினார். படத்தின் இயக்குனரே ஒரு இசையமைப்பாளர். சொல்ல முடியாது அவரே கூட விஜய் ஆண்டனி போல மிகப்பெரிய நடிகராகவும் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. படபிடிப்பு மிகவும் கலகலப்பாக இருந்தது. இரண்டு உலகம் திரைப்படத்தில் இருக்கிறது பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்த திரைப்பட தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.  மேலும் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் முதல் விஜய் வரை முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார்கள் கர்நாடகாவில் அந்து போல நிலைமை இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம். காரணம் இது என்னுடைய பணம். யாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவி செய்யலாம்” என தெரிவித்தார்.