அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சூரி தரிசனம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
காமெடி நடிகர் என்கிற நிலையிலிருந்து ஹீரோவாக உருவெடுத்த நடிகர் சூரி, நேர்த்தியான கதைத் தேர்வுகளின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். விடுதலை, கொட்டுக்காளி, கருடன் போன்ற படங்களை தொடர்ந்து அண்மையில் வெளியான ‘மாமன்’படம் சூரிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

அக்கா- தம்பி பாசம், தாய்மாமனின் பாசப்போராட்டம், கணவன் - மனைவி உறவு என ஒரு குடும்பத்தில் எதார்த்தமாக நிகழும் பிரச்சனைகளை அழகாக காட்சிப்படுத்திய குடும்பக்கதையாக ‘மாமன்’ திரைப்படம் அமைந்தது. மாமன் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூடி அடுத்ததாக ‘மண்டாடி’ திரைப்படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சூரி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகிகள் அவரை வரவேற்று சிறப்பு மரியாதை அளித்தனர். சிறப்பு மகா யாகத்தில் கலந்துகொண்ட அவர், சாமி தரிசனம் முடிந்து கோயிலில் இருந்த ரசிகர்களுடன் நடிகர் சூரி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


