வில்லனாக நடிப்பதற்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை- நடிகர் சூரி

 
ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் சூரி படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் சூரி படம்

நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில்  மாமன் திரைப்படம் வெளியானது. இதன் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சூரி தமிழகம்  முழுவதும் உள்ள பிரபலமான  தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள (பாம்பே சினிமாஸ்) என்னும் தனியார் தியேட்டருக்கு நடிகர் சூரி பிரமோஷன் நிகழ்ச்சிக்காக வந்தார். அவருக்கு ரசிகர்கள் சார்பில் உற்சாகமாக மேளதாளம் முழங்க  வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, "மாமன் படம் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறேன். அந்த அடிப்படையில் இன்று நெல்லை வந்திருக்கிறேன். மாமன் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்து பார்த்து வருகின்றனர். இதை பார்க்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள தியேட்டர்களுக்கு சென்று இடைவேளை நேரங்களில் ரசிகர்களை சந்தித்து வருகிறேன். இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றிய மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் அழாமல் வர முடியாது. அந்த அளவிற்கு சிறப்பான காட்சிகள் உள்ளது. நல்ல திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளதாக கருதுகிறேன். அன்புத் தம்பிகள் பலரும் என் படத்தை கொண்டாடி வருகிறார்கள். தக் லைப் படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வில்லனாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை வந்தால் பார்க்கலாம். நல்ல கதையில் யார் நடித்தாலும் மக்கள் அதிகமானோர் கொண்டாடுகின்றனர். அடுத்த படம் இந்த வருடத்திற்குள் வெளியாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு கவனிக்க வேண்டும். தயவுசெய்து இளைஞர்கள் யாரும் போதைக்கு அடிமை ஆகாதீர்கள். சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை எல்லாமே கஷ்டம் தான். புதிய புதிய காமெடி நடிகர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்" என்றார்.