ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் இயக்குனர் சிவா, நடிகர் சூர்யா சுவாமி தரிசனம்
ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் கங்குவா திரைப்பட இயக்குனர் சிவா, நடிகர் சூர்யா சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே நடிகை ஜோதிகா படம் குறித்து விளக்கமான பதிவை வெளியிட்டு நெகடிங் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்பதிவு வைரலானதுடன், கவனத்தையும் பெற்றது.
இந்த நிலையில், ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் கங்குவா திரைப்பட இயக்குனர் சிவா, நடிகர் சூர்யா சுவாமி தரிசனம் செய்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது 'கங்குவா' திரைப்படம். எதிர்மறை விமர்சனங்களுக்கு திரை பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். திரையரங்கு வளாகங்களில் யூ டியூபர்கள் பட விமர்சனங்களில் ஈடுபட கூடாது என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இயகுநர் சிவா மற்றும் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்துள்ளனர்.