கங்குவா படத் தொகுப்பாளர் நிஷாத் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்

 
surya

கங்குவா திரைப்பட படத் தொகுப்பாளர் நிஷாத் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” என்னும் திரைப்படத்தில், இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொச்சியில் உள்ள அவரது வீட்டில் நிஷாத் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  உயிரிழந்த நிஷாத் சூர்யா 45 படத்திலும் பணியாற்றி வந்தார். 

kanguva

இந்த நிலையில், கங்குவா திரைப்பட படத் தொகுப்பாளர் நிஷாத் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நிஷாத் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ஒரு முக்கிய நபராக ‘கங்குவா’படக்குழுவினரால் என்றும் நினைவுக் கூறப்படுவீர்கள். நிஷாத்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.