மாணவி நந்தினிக்கு “வைர நெக்லஸ்” கொடுத்த நடிகர் விஜய்

 
tn

+2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் நடிகர் விஜய்

tn

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அத்துடன் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையை வழங்கி அவர் கௌரவித்தார்.

tn

இதனிடையே  பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற  வணிகவியல் மாணவி செல்வி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.  மாணவி  நந்தினிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

tn

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸை பரிசாக அளித்துள்ளார்.