#JUSTIN ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் விஜய்

 
vijay

தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களை ஜூன் 17ஆம் தேதி சந்திக்கிறார் நடிகர் விஜய்.

vijayநடிகர் விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சூழலில் அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாக விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை செய்து வருகிறது .தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தல் .நலத்திட்ட உதவிகள் என அரசியல் சார்புடைய பல்வேறு நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் 12ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை  சந்திக்க இருப்பதாக கடந்த மாதம் செய்திகள் உலா வந்தன.

tn

இதுகுறித்து அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸிஸி. N.ஆனந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தளபதி விஜய்" அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த "பத்து மற்றும் பணிரெண்டாம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.