2026-ல் ஆட்சியை பிடித்தது விஜய் மக்கள் இயக்கம்....மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

 
vijay poster

மதுரையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவருக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். குறிப்பாக அவர் 234 தொகுதிகளிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் அந்த மேடையில் பேசிய நடிகர் விஜய், நாளைய வாக்காளர்களாகிய நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்காமல்  இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அவரது இந்த பேச்சு கண்டிப்பாக அரசியலுக்கு வர போகிறார் என்பதை தெரியப்படுத்தியது. இதேபோல் விஜய் மக்கள் இயக்க நிவாகிகளும் அரசியல் பணிகளை செய்து வருகின்றனர். 

vijay

இந்த நிலையில், மதுரையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தி தாள் வடிவில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து அதில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது போல, இடம்பெற்றுள்ளது.  மேலும் அந்த வெற்றிக்காக பிரதமர் மோடி நடிகர் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும், நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் மோடி கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அந்த போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.