கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் செய்த செலவு இத்தனை கோடியா?

 
விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சி

கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் 2 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் 12ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை  சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார் நடிகர் விஜய். அதன்படி முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் 2 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், நிகழ்ச்சி அரங்கத்திற்கு வாடகை மட்டும் 40 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்லது. இதேபோல் விழாவிற்கு வருகை தந்துள்ள மாணார்கள் மற்றும் பெற்றோர்களூக்கு காலை, மதிய உணவு மற்றும் வெளியூரில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்குவதற்கான மண்டப செலவு அனைத்தையும் விஜய் ஏற்றுக் கொண்டுள்ளார்.