“நீங்க தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடிச்சே சாவீங்க!”- சீமானை விளாசிய நடிகை

 
விஜயலட்சுமி விஜயலட்சுமி

“என்ன மிஸ்டர் சீமான் சாபம் எல்லாம் விடுறீங்க.. முதல்ல உங்க கட்சியில இருக்க ஓட்டையை சரி பண்ணுங்க” என விஜய்க்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ... அடிப்படையே தவறு. விஜய் கூறுவது கொள்கையல்ல, கூமுட்டை! சாலையில் ஒன்று அந்த பக்கம் நில், அல்லது இந்த பக்கம் நில்.. இப்படி நடுரோட்டில் நின்றால் லாரி வந்து அடித்துவிடுவான்.  இது நடுநிலை இல்லை மிக கொடுநிலை. ஒன்று சாம்பார் என்று சொல்லு, இல்ல கருவாடு என்று சொல்லு அதென்ன கருவாட்டு சாம்பார்? இந்த ஆட்டம் பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்டாத, 2026ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது” எனக் கூறினார்.


இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்ன மிஸ்டர் சீமான் விஜய் அண்ணனுக்கு சாபம் எல்லாம் விடுறீங்க.. நீங்க என்ன உத்தமனா சீமான்? விஜய்யா இருக்கட்டும், திமுகவா இருக்கட்டும் கொள்கை ரீதியாக தானே தவறு செய்திருக்கிறார்கள், அதனை மக்கள் சொல்லவில்லை, நீங்கள்தான் சொல்றீங்க! அவர்களே லாரி அடித்து சாவாங்க அப்படின்னா... எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழித்துவிட்டு, நடுரோட்டில் விட்டீங்களே... நீங்க எது அடிச்சி சாவீங்க மிஸ்டர் சீமான்? முதல்ல உங்க கட்சியில நடக்குற ஊழலை சரி பண்ணனுங்க.. திருச்சி சூர்யா உங்க ஆபாச வீடியோவலாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. முதல்ல அது என்னன்னு பாருங்க! தி.மு.க.,வுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்... நீங்க தான் கூமுட்டை... நீங்க தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடித்தே ஒரு நாள் சாவீங்க” என விளாசியுள்ளார்.