நடிகர் ரோபோ சங்கர் மறைவு இதயத்தை கனமாக்கியது - நடிகர் விஷால்..!
Sep 19, 2025, 13:22 IST1758268356461
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளப் பககத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"அன்புத் தோழர், மக்களை சிரிப்பிலும் சிந்தனையிலும் மூழ்கடித்த திறமைசாலி நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு என் இதயத்தை கனமாக்கியது.
இரும்புத்திரை மற்றும் சக்ரா ஆகிய படங்களில் அவருடன் சேர்ந்து நடித்த நினைவுகள் மறக்க முடியாதவை, அவர் காமெடியில் அனைவரையும் மகிழ வைப்பது மட்டுமல்லாமல், அவர் கலை மீது கொண்ட அன்பும், நடிப்பை வெளிப்படுத்துவதில் அர்ப்பணிப்பு கொண்ட நல்ல மனிதர்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தாலே அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி இயற்கையாக வந்துவிடும். மற்றும் சக நடிகர்களை மதிக்கும் தன்மை, அனைவரையும் தன் நண்பராக கருதும் குணம் கொண்டவர்.


