கவுண்டமணியின் மனைவி சாந்தி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!

 
Kaundamani Kaundamani

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

காமெடி நடிகர் கவுண்டமணி சாந்தி என்ற பெண்ணை கடந்த 1963ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கவுண்டமணியின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67. அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், மறைந்த சாந்தியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் பிரகாஷ் ராஜ்,
 கார்த்தி உள்ளிட்டோர் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சாந்தியின் உடலுக்கு அஞ்சலு செலுத்தியது குறிப்பிடதக்கது.