நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி நடிகை சாந்தினி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
சென்னை ஐகோர்ட்டில் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தகவல் சொன்ன நிலையில், அதற்கு நடிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.இருந்தாலும் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமினை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.இதைத்தொடர்ந்து 3 ஆண்டுகள் நடிகையின் வழக்கை ஏன் பட்டியலிடாமல் இருந்தீர்கள் என சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நடிகை சாந்தினி கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட கோர்ட்டு, பின்னர் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, அவர் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது


