தமிழகத்திற்கு விடிவுகாலம் வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி- நடிகை கௌதமி

 
நடிகை கெளதமி எடப்பாடி பழனிசாமி நடிகை கெளதமி எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திற்கு விடிவுகாலம் வேண்டும் என்பதற்காக தான் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி  கூட்டணி முடிவுகளை சரியாகவும் மக்களுக்காகவும் முடிவு எடுத்திருப்பதாக திரைப்பட நடிகை கௌதமி கூறினார். 

திமுகவை வீழ்த்தவே பாஜகவுடன் கூட்டணி - நடிகை கவுதமி | Alliance with BJP to  defeat DMK - Actress Gauthami

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் பெண்களையும், தாய்மார்களை இழிவாக பேசிய திமுக அமைச்சர்  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட நடிகையும், அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர் தமிழக அரசு பல்வேறு விதமான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டதாகவும் அவர் குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும் கடந்த பொங்கல் காலங்களில் திமுக அரசு மக்களுக்கு மக்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்களில் வஞ்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர்  பதவி விலக வேண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பின்னர் கூட்டத்தின் முடிவில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் அவர் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்கும் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை போன்று "நீங்கள் செய்வீர்களா" "நீங்கள் வாக்களிப்பீர்களா" எனக் கூறிய சம்பவம் அங்கிருந்த கூட்டத்தின் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.  

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கெளதமி, “தமிழகத்திற்கு விடிவு காலம் உருவாக்க வேண்டும், தமிழகத்திற்கான ஒரு சிறப்பான கூட்டணி அமைவதற்காக தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாஜக அரசுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த கூட்டணி வரும் காலங்களில் அமோக வெற்றி பெறும். விஜய் பொதுவெளியில் வந்து பணியாற்ற வேண்டும், அப்பொழுதுதான் அவருக்கு வாக்கு வங்கி எவ்வளவு என்று தெரியும். பூத் கமிட்டி என்று கூட்டி இருந்த சம்பவத்தில் சிறுவர்களை ஈடுபட்டிருந்தால் அது தவறான விஷயம் ஆகையால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய்க்காக கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என தேர்தல் களத்துக்கு பின்பு தான் தெரியும்” என்றார்.