#Breaking அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தமிழக பாஜகவில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் , வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதை தொடர்ந்து காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகினார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன். என் தந்தை அதிமுகவில் பயணித்துள்ளார் என்று கூறினார். பாஜகவிலிருந்து விலகிய அவர் திமுகவுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டு வந்த நிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.