நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்!!

 
tn

பிரபல தயாரிப்பாளரும்,  இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை காலமானார்.  இவர் வாழ நினைத்தால் வாழலாம், நன்றி  மீண்டும் வருக,  புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது போன்ற படங்களை தயாரித்துள்ளார். விலாங்கு மீன்,  பவர் ஆப் வுமன் , புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

tn

நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி 20 வயதில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்தார். இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராக பணிபுரிந்து 15 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். மேலும் பி.சி.ஸ்ரீராம் மற்றும் வேலு பிரபாகரன் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களைத் தனது முயற்சிகள் மூலம் அறிமுகப்படுத்தினார். ஜெயதேவி முதலில் நலம் நலமறிய ஆவல் (1984) திரைப்படத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார். பின்னர் 1980கள் மற்றும் 1990கள் முழுவதும் அதிக திரைப்படங்களைத் தயாரித்தார்.2000ஆம் ஆண்டில், புரட்சிக்காரன் என்ற படத்தில் எழுத்தாளராகப் பணியாற்றினார். 

tn

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஜெயதேவி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் இயக்குனர் வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.