நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி மனு தாக்கல்
நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு பேசும் மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறான கருத்துக்களையும் பேசினார். இது தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சம்மன் வழங்க கஸ்தூரி வீட்டிற்கு சென்ற நிலையில், நடிகை கஸ்தூரில் வீட்டின் பின்வாசல் வழியாக காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. எந்நேரமும் கைது செய்யப்படலாம் என அஞ்சி நடிகை கஸ்தூரி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை விசாரிக்கிறார். தெலுங்கர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் போலீசாரின் சம்மனை ஏற்க மறுத்து தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.


