நடிகையை சந்திக்க நேரம் இருக்கு... தூய்மை பணியாளர்களை சந்திக்க நேரமில்லையா?- ஸ்டாலினை விளாசிய கஸ்தூரி

 
கஸ்தூரி கஸ்தூரி

மூத்த நடிகையின் கோரிக்கையை கேட்டு குடும்பத்துடன் சென்று அவரை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பத்து நாட்கள் கடும் சூழ்நிலையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லையா என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கஸ்தூரி

சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் வெளியே கடந்த 10 நாட்களாக போராடிவரும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவளித்த நடிகை கஸ்தூரி குறைகளைக் கேட்டறிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புரியும் இரண்டு மண்டலங்களை தற்போது தனியார் மயமாக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை வளாக முன்பாக 700 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நான் இந்த இடத்திற்கு விமர்சிக்க வரவில்லை கருணை மனுவை கொடுப்பதற்காக , முதலமைச்சரிடம் ஒரு கருணை மனு வழங்க வேண்டும் என இங்க வந்துள்ளேன். மழை வெள்ளம் காலத்தில் தேனாம்பேட்டை பகுதியில் இரவு பகல் பாராமல் பணியாற்றிய அனைத்து தூய்மை பணியாளர்களும் எனக்கு பெயர் சொல்லி அழைக்கும் படி பழக்கமானார்கள்,அப்போது ஒரு நபர் இரவும் பகலும் தண்ணீர் வெளியே எடுக்கும் மோட்டர் மீது படித்து உறங்கி தொடர்ந்து பணியினை மேற்கொண்டு அங்கு தேங்கி இருந்த தண்ணீரை அகற்றினார். அந்த நன்றி கடனுக்காக நான் இங்கு வந்துள்ளேன்

15 வருடங்களாக ஒருவர் திருமண வாழ்க்கை மேற்கொண்டவர் பிரிந்தால் அவருக்கு ஜீவனாம்சம் தருவார்கள் , மேலும் ராணுவ படையினர் 25 வருட காலம் பணியினை மேற்கொண்டால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஊதியம் கொடுப்பார்கள் போரில் சண்டையிடுவது போல் போல் கழிவுகளை சுத்தம் செய்வது அனைவராலும் செய்ய முடியாது , அதை செய்யக்கூடியவர்கள் சமூக சேவைக்கு ஒப்பான ஒரு பணி. நம் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்து கொள்பவர்களின் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது ஒன்று ஆனால் அவர்களை காவல்துறை பயன்படுத்தி கைது செய்ய உள்ளோம் என அச்சுறுத்துவது நியாயமற்றது , அவர்களுக்கு உரியதைதான் அவர்கள் கோரிக்கையாக வைக்கின்றனர். தனியார் மயமாக்கபட்ட மண்டலங்களில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தொகுதிகளும் சாரும் , எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் பணிகள் பறிக்கப்பட்டது இது தொடர்பாக காண்ட்ராக்டரிடம கேட்க வேண்டும் என அடிதடியாக கூறப்படுவது நியாயமற்றது

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு மூத்த நடிகை விருப்பப்பட்டார் என்பதற்காக அவரை சென்று நேரில் சந்தித்துள்ளார் இதன்மூலம் வீடு தேடி வரும் ஸ்டாலின் இன்னும் தத்துவத்தை நிலை நாட்டியுள்ளார் , ஆனால் 10 நாட்களாக உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிவரும் மக்களை பார்க்க முதலமைச்சருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா? திமுக ஆட்சிக்கு வரும்பொழுது அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் தாய்மை நலப்பணியாளர் நலம் பிரிவில் 4 வாக்குறுதி வழங்கியுள்ளனர் , அதில் 10 ஆம் வகுப்புக் மேல் படித்திருந்தால் அவர்களுக்கு படிப்புக்கு தகுந்த மாற்று பணி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர் மேலும் இதுவரை நிரந்தர பணி வழங்கப்படாத தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது இதே பன்று தூய்மை பணி தனியாரிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில் 12000 நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இடம் தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என காட்டமாக ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார் அந்த கடிதத்தில் மேலும் திமுக ஆட்சியில் இதை போன்று நடக்க விடமாட்டோம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த போராட்டத்தின் பொழுது அமைச்சர் சேகர்பாபு இங்கு வந்து தூய்மை பணியாளர்களை சந்தித்தபோது தூய்மை பணியாளர்கள் அமைச்சரிடம் பேனா வைக்கிறீர்களே எங்களுக்கு ஒரு நல்வழி காட்டக் கூடாதா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர் அது தவறுதான் என்று நான் நினைக்கிறேன் ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவை போற்ற வேண்டும் மற்றும் மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தால் போராடும் நபர்களுக்கு உரிய ஊதியம் வேலை நிரந்தரம் வழங்குவது தவிர வேறு ஏதேனும் சிறந்த வழி உள்ளதா ? நீங்கள் அமைக்கும் பேனா எழுதுமா எழுதாதா என்று தெரியாது ஆனால் இவர்களுக்கு நல்வழி காட்டினால் உங்களைப் பற்றி வரலாறு எழுதும்

அரசியல் நோக்கங்களுக்காக தூய்மை பணியாளர்கள் திராவிட முன்னேற்ற கழகம் பயன்படுத்துகிறது, அவர்கள் எதிர்கட்சியாக இருந்தபோது கொடுத்த கோரிக்கைகளுக்கும் கடிதத்திற்கும் தற்போது ஏன் முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை என கேட்டுக் கொண்ட அவர் சி எம் டி ஏ பொறுப்பு அமைச்சர் சேகர்பாபு அல்லது நகர்புற வாழ்வு துறை அமைச்சர் சென்னை பெருநகர மேயர் பிரியா அல்லது இந்த பிரச்சனையை தீர்க்கக் கூடிய நபர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை உடனே தீர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.