நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா?- நடிகை குஷ்பு விளக்கம்

 
எம்.பி.,- எம்.எல்.ஏ கனவில் குஷ்பு- பாஜக விரிக்கும் வலையில் சிக்குகிறாரா?

பாஜக தலைமை எடுக்கும் முடிவை பொருத்தே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பிரான நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

Image

கோவில்களை சுத்தம் செய்ய வேண்டுமென பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதன் அடிப்படையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் குஷ்பு தூய்மை பணியை மேற்கொண்டார். துடைப்பம் கொண்டு கோவிலை பெருக்கி சுத்தம் செய்த, குஷ்பு பின்னர் சோப்பு நீரைக் கொண்டு தூய்மை செய்யும் பணியில் இறங்கினார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. கடந்தாண்டு 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாம் உறுப்பினராக உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் பதியப்பட்டு இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழகத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Actress Khushbu arrested | திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க  சென்ற நடிகை குஷ்பு கைது

ராமர் கோவில் இந்தியாவின் ஒற்றுமைக்கு அவசியமானது. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, ராமர் மீண்டும் வரமாட்டாரா என காத்திருக்கும் பலருக்கு பிரதமர் மோடி ஏற்பாட்டில் கட்டப்பட்டு வரும் கோவில், மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைக்கும். கட்சித் தலைமை முடிவெடுப்பதை பொருத்துத் தான், தாம் தேர்தலில் போட்டுவதும் போட்டியிடாததும் உள்ளது” என்றார்.