நடிகை ரன்யா ராவ் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..!

 
1

நடிகை ரன்யா ராவின் தந்தை கர்நாடக போலீசில், வீட்டு வசதி கழகத்தின் டிஜிபியாக உள்ள ராமச்சந்திர ராவ் என்பவர் தான். மேலும் ரன்யா துபாயிலிருந்து வந்தபோது 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்தது வந்ததால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. மேலும் லாவெல்லே சாலையில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.2.7 கோடி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை உடனடியாக 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

 

வியாழக்கிழமை அன்று ரன்யாவின் வழக்கறிஞர் குழு அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தது: "ரன்யாவை கைது செய்த பிறகு, DRI அதிகாரிகள் அவரை செவ்வாய்க்கிழமை இரவு ஒரு நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தினர், மேலும் அவரை காவலில் எடுக்க கோரவில்லை. நீதிமன்றம் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்தது. அவர் பெங்களூருவில் வசிப்பவர், என்பதால் விசாரணைக்கு ஆஜராகுவார், எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்." என கூறப்பட்டது.

 

இருப்பினும், DRI அவரது ஜாமீனுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.  ரன்யாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும்... தங்கக் கட்டிகளை எப்படி? யாரிடம்? எங்கு வாங்கினார், அதற்க்கு எப்படி பணம் செலுத்தப்பட்டது?  கடத்தலின்போது மறைத்து வைத்திருந்த முறை மற்றும் கடத்தப்பட்ட தங்கத்திற்கான இறுதி திட்டங்கள் என்ன என்பதை விசாரிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதே போல் DRI அதிகாரிகள் ரன்யா ராவ் அடிக்கடி வெளிநாடு பயணம் செய்ததை சுட்டிக்காட்டி உள்ளனர். அவரது பாஸ்போர்ட் பதிவுகளை மேற்கோள் காட்டி, ரன்யா இதுவரை 27 முறை துபாய் சென்றுள்ளார், மேலும் 45 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார், என்பதால் அவரது வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் "அவர் வேலை செய்யும் நிபுணரும் அல்ல, அடிக்கடி சர்வதேச பயணங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பல திரைப்பட வாய்ப்புகளும் அவரிடம் இல்லை," என்று புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர். 

இந்த கடத்தலுக்கு ரன்யாவுக்கு யார் உதவி செய்வது? இது ஒரு கடத்தல் சிண்டிகேட்டா? தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிரச்சனையா, மேலும் குற்றம் சாட்டப்பட்டவரை ஆழமாக விசாரிக்க வேண்டும். எனவே, மார்ச் 9 முதல் மூன்று நாட்களுக்கு அவரை காவலில் எடுக்கிறோம்," என்று அரசு வழக்கறிஞர் கூறினார். அதே போல் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும்  நீதிமன்றம் ரன்யா ராவுக்கு தினமும் அரை மணி நேரம் அவருடைய வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதி அளித்ததோடு, அவருக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போது ரன்யா வீங்கிய கண்கள் மற்றும் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருவதால், இது காவலின் போது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சர்ச்சைகள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, தற்போது ரன்யாவின் வழக்கு சிபிஐ-யிடம் சென்றுள்ளது. எனவே நகை கடத்தல் பற்றி சிபிஐ அதிகாரிகள் தங்களின் விசாரணையை தொடங்கு உள்ளனர் (CBI probe transferred) என்பது குறிப்பிடத்தக்கது.