நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்!

 
ச்

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார். தனது தந்தை இறந்தது குறித்து ‘“Until we meet again, Dad," என சமந்தா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

samantha father passed away

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தார். இவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையை எடுத்துவருகிறார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. 


இந்நிலையில் நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று காலமானார். தனது தந்தை இறந்தது குறித்து நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘“Until we meet again, Dad," என உருக்கமாக பதிவிட்டுள்ளார். சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தெலுங்கு ஆங்லோ இந்தியன் என கூறப்படுகிறது. ஜோசஃப் பிரபுவின் மறைவு சமந்தா குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.