2-வது திருமணத்தை பிரபல கிரிக்கெட்டருடன் சத்தமில்லாமல் முடித்த நடிகை
நடிகை சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் இருவருக்கும் இன்று காலை திருமணம் நடந்து முடிந்தது.
பிக் பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் சம்யுக்தாஷான். மாடல் அழகியான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் படு பிசியானார். வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்த சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் கணவரை விவாகரத்து செய்த சம்யுக்தா, தற்போது இரண்டாவது திருமணத்தை சத்தமில்லாமல் எளிமையாக செய்துமுடித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த்தை சம்யுக்தா காதலித்து கரம் பிடித்துள்ளார். அவர்களது திருமனம் எளிமையாக இருவீட்டர் மற்றும் நண்பர்களின் பங்கேற்புடன் சைலண்ட்டாக நடந்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில சீசன்கள் விளையாடி இருக்கிறார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றிவருகிறார்.


