”கவனம் பெற வதந்தி பரப்புறாங்க..” - சிவகார்த்திகேயன்
Dec 1, 2025, 19:33 IST1764597800186
மூளை கம்மியாக இருப்பதால்தான் நடிகராக இருக்க முடிகிறது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற FANLY எனும் பிரத்யேக செயலியின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “மூளை கம்மியாக இருப்பதால்தான் நடிகராக இருக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்தால் இயக்குநர்களை எல்லாம் தொல்லை செய்திருப்பேன். அது இல்லை என்பதாலேயே நடிகராக இருக்கிறேன். என் ரசிகர்கள் கடவுளையும், தாய், தந்தையையும் மட்டுமே கொண்டாட வேண்டும் என நினைப்பேன், அதனால் தான் நான் அனைவரையும் சகோதர, சகோதரிகளே என அழைக்கிறேன். நான் என் ரசிகர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பேன். சமூக வலைதளங்களில் கவனம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வதந்திகள் பரப்பப்படுகின்றன” என்றார்.


