2062ல் தான்... இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா

 
s

தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் குறித்து நடிகை த்ரிஷா இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

த்ரிஷா நடிக்கும் தி ரோட் பட முன்னோட்டம் வெளியானது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து நடைமுறைகள் தொடங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இக்கட்டான இந்தச் சூழலில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் அண்மையில் ஒரு திருமண நிகழ்வில் ஒரே நிற ஆடையில் ஜோடியாகக் கலந்துகொண்டது சர்ச்சையை மேலும் தூண்டியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களே சங்கீதா தரப்பு, த்ரிஷா தரப்பு என இரண்டாகப் பிரிந்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனிடையே த்ரிஷாவின் சமூக வலைதளப்பக்க பதிவுகள் நெட்டிசன்களால் உற்றுநோக்கப்படுகின்றன.

இந்நிலையில் தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் குறித்து நடிகை த்ரிஷா இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு மணி நேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாட்களாகும். அப்படியென்றால் கணக்குப்படி 2062ல் தான் நன்றாக உணர்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். தூக்கமின்மையால் அவதிப்படுவது குணமாக சுமார் 36 ஆண்டுகளாகும் என இன்ஸ்டா பதிவில் கூறியுள்ள நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகிவருகிறது.